Thursday, November 28, 2013

என் பக்கம்- வாழ்ந்தாலும் ஏசும் வையகம்



என் கணவரின் அலுவலகத்தில் வேலை பார்த்த ஒரு மூத்த அதிகாரி பணியிலிருந்து ஓய்வு பெற்று விட்டார்.அவருக்கு ஒரே மகன். அவரும் வெளி நாட்டில் வேலை செய்கிறார். ஒரு நாள் அவரை எதேச்சையாக கோயிலில் சந்தித்த போது, ‘ எப்படி பொழுது போகிறது ?” என்று விசாரித்தார் என் கணவர். அதற்கு அவர், “ நான் ஒரு பிரபல நிறுவனத்தில் வேலை பார்க்கிறேன். அங்கு வாங்கும் சம்பளம் முழுவதையும் கஷ்டப்படுகிறவர்களுக்கு கொடுத்து உதவி செய்கிறேன். வீட்டில் சும்மா இருந்தால் தேவையில்லாத எண்ணங்கள் வரும். பல வியாதிகள் வரும். வெளியில் செல்வதால் பல மனிதர்களை பார்க்கிறேன். வாங்கும் சம்பளத்தை ஏழைகளுக்கு உதவுவதால் மன நிம்மதி கிடைக்கிறது. இதை புரிந்து கொள்ளாத பலர் , நான் பணத்தாசை பிடித்தவன் என்று பேசுகிறார்கள். பேசுபவர்கள் பேசிக்கொள்ளட்டும் என்று விட்டு விட்டேன் என்றார்.

 நம்மூரில் யார் நிம்மதியாக வாழ்ந்தாலும் பொறுக்க மாட்டார்கள்.

( 21-9-2013 தினமலர் – பெண்கள் மலர் எங்கள் பக்கத்தில் சொன்னது. “என் பக்கம்” – என்று இதுவரை நான் சொல்லியதும், சொல்லப்போவதும் தொடரும்...!)

15 comments:

  1. ம்.. தொடருங்க ..வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. //வீட்டில் சும்மா இருந்தால் தேவையில்லாத எண்ணங்கள் வரும். பல வியாதிகள் வரும். வெளியில் செல்வதால் பல மனிதர்களை பார்க்கிறேன். வாங்கும் சம்பளத்தை ஏழைகளுக்கு உதவுவதால் மன நிம்மதி கிடைக்கிறது. //

    ஒரு நல்ல மனிதரின் மிக நல்ல எண்ணங்கள். பாராட்டத்தான் வேண்டும். பகிர்வுக்கு நன்றிகள்.

    >>>>>

    ReplyDelete
  3. //( 21-9-2013 தினமலர் – பெண்கள் மலர் எங்கள் பக்கத்தில் சொன்னது. “என் பக்கம்” – என்று இதுவரை நான் சொல்லியதும், சொல்லப்போவதும் தொடரும்...!)//

    வாழ்த்துகள் ..... தொடரட்டும். மகிழ்ச்சி.

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள்.சிறப்பான அனுபவங்கள் மற்றும் படைப்புகளுக்காக காத்திருக்கிறோம்.

    ReplyDelete
  5. உண்மை...

    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  6. Sister Usha Anbarasu introduced your blog. Heart welcome to the Blog world

    ReplyDelete
  7. //இதுவரை நான் சொல்லியதும், சொல்லப்போவதும் தொடரும்...!)////

    நாங்களும் உங்களை கலாய்க்க தொடர்வோம்ல

    ReplyDelete
  8. வணக்கம் சகோதரி
    வருக சகோதரி. இணைய உலகில் தங்கள் பங்களிப்பைத் தருக. தங்களைப் போன்றவர்களின் வருகை இணையத்தின்பால் ஆரோக்கியமான சூழலை உருவாக்கும். தொடருங்கள் வாழ்த்துகள்..

    ReplyDelete